அதிரடி பேட்ஸ்மேனை மாற்று வீரராக அறிவித்த ஆஸ்திரேலியா…, பீதியில் இந்திய பவுலர்கள்!!

0
அதிரடி பேட்ஸ்மேனை மாற்று வீரராக அறிவித்த ஆஸ்திரேலியா..., பீதியில் இந்திய பவுலர்கள்!!
அதிரடி பேட்ஸ்மேனை மாற்று வீரராக அறிவித்த ஆஸ்திரேலியா..., பீதியில் இந்திய பவுலர்கள்!!

டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் விலகியதை அடுத்து, இவருக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாற்று வீரர் தயார்:

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்குபெற உள்ள அனைத்து அணிகளின் வீரர்களையும் முன்கூட்டியே, அந்தந்த கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதில் சில வீரர்கள் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு இணையான மாற்று வீரர்களையும் அணி நிர்வாகம் உடனுக்குடன் அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் நேற்று கோல்ஃப் மைதானத்தில் விளையாடும் போது திடீரென ஒரு விபத்து ஏற்பட்டது. இதில், இவரது வலது கையில் ஆழமான வெட்டு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவருக்கு ஏற்பட்டுள்ள காயம் ஆழமாக இருப்பதால் உலக கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நெதர்லாந்து…, சூப்பர் 12ல் நுழைந்த இலங்கை!!

இதனால், இவருக்கு தகுந்த மாற்று வீரராக, கேமரூன் கிரீனை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர், இந்தியாவுக்கு எதிராக 30 பந்தில் 61 ரன்கள், 21 பந்தில் 52 ரன்கள் என அடித்து, பவுலர்களை பீதி அடைய வைத்துள்ளார். இவரது இந்த வருகை ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலமாகவே இருக்கும். மேலும், இவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here