16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நெதர்லாந்து…, சூப்பர் 12ல் நுழைந்த இலங்கை!!

0

டி20 உலக கோப்பை தொடரின் தகுதி சுற்றில் இலங்கை அணி, நெதர்லாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது.

SL vs NED:

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 ல் இடம் பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குரூப் A ல் இடம்பிடித்துள்ள இலங்கை அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து GMHBA மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, களமிறங்கிய இலங்கையின் தொடக்க வீரர்களில் பாத்தும் நிஸ்ஸங்க (14), தனஞ்சய டி சில்வா(0), அசலங்கா (31), பானுகா ராஜபக்ச (19) என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மறுபுறம் நெதர்லாந்தின் பந்துவீச்சாளருக்கு சவால் விடுத்து குஷால் மெண்டிஸ் அதிரடி காட்டி வந்தார். இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இலங்கை சார்பாக குஷால் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 79 ரன்களை அடித்து அசத்தி இருந்தார்.

வரலாறு படைத்த இந்திய இளம் வீரர்கள்…, மல்யுத்தத்தில் 3 பதக்கங்களை அள்ளி அசத்தல்!!

இதனை தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த போட்டியில், நெதர்லாந்தின் மேக்ஸ் ஓ’டவுட் 73* வெற்றிக்காக கடைசி வரை போராடினார். ஆனாலும், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12ல் நுழைவதை உறுதி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here