குட் நியூஸ் இளைஞர்களே.., தீபாவளி பரிசாக அரசு வேலை.., மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
குட் நியூஸ் இளைஞர்களே.., தீபாவளி பரிசாக அரசு வேலை.., மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி தீபாவளியை பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு சிறப்பான பரிசை வழங்க உள்ளார்.

தீபாவளி பரிசு:

கொரோனா வருகையால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். . இதையடுத்து நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்ற பரவலான விமர்சனங்கள் எழ தொடங்கியது. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம், அடுத்த 18 மாதங்களில் பத்து லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு “பரிசு” கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளார். அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சனிக்கிழமையன்று பிரதமர் இளைஞர்களுடன் “வீடியோ கான்பரன்சிங்” மூலம் உரையாடு உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து 75,000 இளைஞர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பணியாளர்கள் உச்சகட்ட ஷாக்!!

மேலும் பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சுங்கம் மற்றும் வங்கி போன்ற பிற துறைகளில் வேலைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here