Home செய்திகள் TET தேர்வர்கள் போராட்டம் – கல்வி அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதம்! அரசுக்கு நெருக்கடி!!

TET தேர்வர்கள் போராட்டம் – கல்வி அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதம்! அரசுக்கு நெருக்கடி!!

0
TET தேர்வர்கள் போராட்டம் – கல்வி அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதம்! அரசுக்கு நெருக்கடி!!
TET தேர்வர்கள் போராட்டம் - கல்வி அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதம்! அரசுக்கு நெருக்கடி!!

ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர் உண்ணாவிரதம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வாணையம் நடத்தும் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், இந்த டெட், தேர்வாணையம் நடத்திய தேர்வில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு இதுவரை பணியமனம் வழங்கப்படவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின், வெளியே ஒன்று சேர்ந்த 2014ம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். 3000க்கும் அதிகமான நபர்கள் கூடி, தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு சூப்பர் வசதி – இனி உங்க கோரிக்கை எல்லாம் நிமிஷத்துல பரிசீலனை! ஸ்டாலின் அதிரடி!!

இந்தத் தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம், குறுந்தகவல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை தகுதி பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். கடந்த 8 வருடங்களாக தாங்கள், நிற்கதியில் இருப்பதாகவும், இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தங்களுக்கு பணி நியமனம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தேர்வர் ஒருவர், தான் தகுதி பெற்ற போது 25 வயது எனவும், இப்போது 8 வருடங்கள் கடந்து தனக்கு 33 வயதாகிறது எனவும் வேதனை தெரிவித்தார். இந்த சிக்கலுக்கு, மனிதாபிமான அடிப்படையில் விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here