“கங்குவா” படத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள்.., செம்ம ஹைப் கொடுத்த நடிகர் சூர்யா!!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தை குறித்து பேசியுள்ளார். அதாவது கங்குவா திரைப்படம் அற்புதமாக வந்துள்ளது. உங்கள் காத்திருப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். அந்த அளவுக்கு படம் பிரமாண்டமாக வந்துள்ளது. நீங்கள் மொத்தமாக கொண்டாடும் விதமாக இந்த படம் இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here