வி.ஏ.துரைக்கு 5 லட்சம் கொடுத்த சூர்யா.., ரஜினி என்ன செஞ்சிருக்காரு.., அம்பலமான உண்மை!!

0
வி.ஏ.துரைக்கு 5 லட்சம் கொடுத்த சூர்யா.., ரஜினி என்ன செஞ்சிருக்காரு.., அம்பலமான உண்மை!!
வி.ஏ.துரைக்கு 5 லட்சம் கொடுத்த சூர்யா.., ரஜினி என்ன செஞ்சிருக்காரு.., அம்பலமான உண்மை!!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவத்திற்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவிக்கரம் நீட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை:

தமிழ் சினிமாவில் பிதாமகன், என்னமா கண்ணு, கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்திலும் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் இருந்துள்ளார். இது மாதிரி பல படங்களை தயாரித்த வி.ஏ.துரை, தற்போது நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், மருந்து மாத்திரை வாங்க கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க உதவி கேட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரின் நெருங்கிய நண்பரான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி, தற்போது எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். இருப்பினும் அவரின் கால்களில் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறவில்லை. தயாரிப்பாளர் வி.ஏ.துரை வெளியிட்ட வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா அவருக்கு 2 லட்சம் மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளார்.

இந்தி ’சேது’ பட இயக்குனர் சதீஷ் கௌசிக் திடீர் மறைவு… கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் திரையுலகம்!!

அதே போல் நடிகர் கருணாஸ் 50000 ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். அதுமட்டுமின்றி “நீ ஒன்றும் கவலை படாத நான் பார்த்துக்குறேன்” என்று தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல் கூறியுள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அவரை நேரில் காண போவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here