இந்தி ’சேது’ பட இயக்குனர் சதீஷ் கௌசிக் திடீர் மறைவு… கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் திரையுலகம்!!

0
இந்தி ’சேது’ பட இயக்குனர் சதீஷ் கௌசிக் திடீர் மறைவு... கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் திரையுலகம்!!
இந்தி ’சேது’ பட இயக்குனர் சதீஷ் கௌசிக் திடீர் மறைவு... கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் திரையுலகம்!!

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌசிக் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ் கௌசிக்:

பாலிவுட் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சதீஷ் கௌசிக். இவர் நடிப்பு மட்டுமின்றி பல படங்களை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியை வைத்து இவர் இயக்கிய, ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, மிஸ்டர் இந்தியா போன்ற திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி இவருக்கு இயக்குனர் என்ற பெருமையை தேடி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி தமிழில் பாலா இயக்கிய “சேது” படத்தை ’தேரே நாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி இவரை முன்னணி இயக்குனராக உயர்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌசிக், 13 படங்களை இயக்கியுள்ளார்.

நாட்டாமை படத்த பாதியிலேயே விட்டு ஓடிய கே. எஸ். ரவிக்குமார்., இதான் காரணமா? வெளியான ஷாக் நியூஸ்!!

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வந்த சதீஷ் கௌசிக் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சையும் பெற்று வந்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பாலிவுட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்புக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here