இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் –  வானில் நிகழப்போகும் அதிசயம்..! எங்கே, எப்போது, எப்படி பார்க்கலாம்!!!

0

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மே 26ஆம் தேதி பவுர்ணமி அன்று நிகழவுள்ளது. இந்த நாளில்  பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதையே நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். இந்த ஆண்டில் மொத்தம் நான்கு சந்திர கிரகணங்கள் நிகழவிருக்கின்றன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மே 26 ஆம் தேதி நிகழப்போகும் இந்த முழு சந்திர கிரகணத்தில் சந்திரன் சற்று சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தோன்றுவதால், இது இரத்த நிலவு (Blood Moon)என்று அழைக்கப்படுகிறது. கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் இருக்கும் தூசி துகள்களால்  நிலவில் சிவப்பு நிறம் தோன்றுவதுண்டு. சூரிய கிரகணம் போன்று அல்லாமல் இதனை சாதாரண கண்களால் காணமுடியும். இது ஜனவரி 21, 2019 க்குப் பிறகு முதல் முழு சந்திர கிரகணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே, எப்போது பார்க்கலாம்??

இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை வரும் மே 26ஆம் தேதி அன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் வேறும் கண்களால் இந்த கிரகணத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் மாலை 6.15 முதல் 6.22 வரை மட்டுமே காணலாம். அதேசமயம் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் பகுதியளவு சந்திர கிரகணம் மட்டுமே தெரியும்.

மேலும் இதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கத்திய நாடுகள், தெற்கு அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா கடற்கறை, பசுபிக் கடல் போன்ர பகுதிகளில் இதனை காண முடியும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதால் மக்கள் இதை கண்டுகளிக்க ஆர்வமுடன் உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here