கொரோனாவினால் அதிக இளைஞர்களை இழக்கும் மாநிலம் !!!

0

கொரோனாவின் இரண்டாவது அலையில் கடந்த ஆண்டை விட தற்போது இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து மாநில அரசு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அதிகமான முதியவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கொரோனாவின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு மாநிலத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனாவின் முதல் அலையில் 40 வயதிற்கு கீழுள்ளவர்கள் 9.3 லட்ச பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 3569 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10.1 லட்ச பேர் பாதிக்கப்பட்டு 44,887 பேர் உயிரிழந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு – ரசிகர்கள் ஷாக்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த பாதிப்பு கடந்த ஆண்டு 9 மாதங்களில் பதிவானவை. ஆனால் இந்த ஆண்டு வெறும் 4 மாதங்களில் 40 வயதிற்கு இளையவர்கள் 16 லட்ச பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2260 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15 லட்ச பேர் பாதிக்கப்பட்டு 22,141 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here