மூட்டு வலியால் அவதியா? இதையெல்லாம் செஞ்சு பாருங்க.,, வலி பறந்து போயிடும்!!

0
மூட்டு வலியால் அவதியா? இதையெல்லாம் செஞ்சு பாருங்க.,, வலி பறந்து போயிடும்!!
மூட்டு வலியால் அவதியா? இதையெல்லாம் செஞ்சு பாருங்க.,, வலி பறந்து போயிடும்!!

முன்னொரு காலத்தில் மூட்டு வலி வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதினர் கூட இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றன. அதாவது தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, அதிக நேரம் நிற்பது உள்ளிட்ட காரணங்களால் தான் இந்த மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் நாள்தோறும் நாம் செய்யும் வேலைகளிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே இந்த மூட்டு வலி பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டிப்ஸ்:
  • நாள்தோறும் உடற்பயிற்சி கட்டாயம். அதாவது ஜிம் ட்ரைனரின் அறிவுரையின்படி நடைப்பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.
  • மூட்டு வலி உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும், ஏனென்றால் உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க மூட்டு வலியும் அதிகமாக இருக்கும்.
  • முடக்கத்தான் கீரை, பால் ஆகியவற்றை உணவில் நாள்தோறும் சேர்த்து கொள்வது நல்லது. ஏனென்றால் அதில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால் மூட்டு வலுவடைந்து இயக்கம் அதிகரிக்கும்.
  • பாதாம்பருப்பு,சோயாபீன்ஸ்,காளிபிளவர், ஒமேகா3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவு,பருப்புகள், ஆளி விதைகள், சியா விதைகள் ஆகியவைகள் மூட்டுத்தேய்மானத்தைத் தடுக்கும்.
  • சாதம் வடித்த கஞ்சியை மிதமான சூட்டில் முழங்காலில் நாள்தோறும் ஊற்றி வந்தால் வலி குறையும்.
  • சுண்டக்கடலையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதை உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகள் பலம் அடையும்
  • பிரண்டை துவையல் வாரத்திற்கு 3 முறை சாப்பிடுங்கள் கட்டாயம் மூட்டு வலி குறையும்.
  • ஆப்பிள், கிரான்பெர்ரி பழங்கள் மூட்டு வலிகளைப் போக்க உதவும்.
  • மேற்சொன்னவைகளை கட்டாயம் follow செய்து பாருங்கள் 1 மாதத்தில் பலன் கிடைக்கும். மேலும் மூட்டு வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here