81,758 மாணவர்கள் தற்கொலை – என்சிஆர்பி அதிர்ச்சி தகவல்

0
Students Suicide

தேசிய குற்றப்பிரிவு ஆணையம் 2009 ஜனவரி 1 முதல், 2018 டிசம்பர் 31 வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் சராசரியாக 28 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

என்ன காரணம்??

2018ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். மேலும் மனநல பாதிப்பு, மன உளைச்சல், போதைப்பொருள்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களுக்குக்காகவே மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் இரண்டாவது இடம்

2018ம் ஆண்டில் மாநில வாரியாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை
முதல் இடம் – மஹாராஷ்டிரா (1448 தற்கொலைகள்)
2ம் இடம் – தமிழ்நாடு (953 தற்கொலைகள்)
3ம் இடம் – மத்திய பிரதேசம் (862 தற்கொலைகள்)
4ம் இடம் – கர்நாடகா (755 தற்கொலைகள்)
5ம் இடம் – மேற்குவங்கம் (650 தற்கொலைகள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here