ஐபிஎல் மினி ஏலத்திலிருந்து ஸ்டார்க் விலகல் – காரணம் இதுதான்!!

0

ஐபிஎல் மினி ஏலத்திற்காக ஏலம் விடும் வீரர்களின் பெயரை பதிவதற்கு வீரர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் தனது பெயரை பதியவில்லை. இது இவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

ஐபிஎல்:

தற்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14 வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான மினி ஏலத்தை வரும் 18ம் தேதி நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் ரசிகர்களும் காத்து கொண்டு வருகின்றனர். மேலும் ஐபிஎல் மினி ஏலத்தில் ஏலம் விடுவதற்காக வீரர்கள் தங்களது பெயரை பதிவிட கால அவகாசம் வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதில் மொத்தமாக 1,097 வீரர்கள் தங்களது பெயரை பதிந்துள்ளனர். இதில் 814 இந்திய வீரர்களும், 283 வெளிநாட்டு வீரர்களும் தங்களது பெயரை பதிந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவு அணியை சேர்ந்த வீரர்கள் தங்களது பெயரை பதிந்துள்ளனர். இந்த அணியில் இருந்து 56 பேர் பதிந்துள்ளனர்.

ஸ்டார்க் விலகல்:

கடந்த சில ஆண்டுகாலமாக விளையாடாத ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தென்னாபிரிக்கா சுற்று ரத்தாகிய நிலையில் டி 20 உலக கோப்பைக்கு பயிற்சி எடுக்கும் வகையில் ஸ்டார்க் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சசிகலா வருகையை முன்னிட்டு பேரணி – காவல் ஆணையர் அனுமதி மறுப்பு!!

ஆனால் ஐபிஎல் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் நடைபெறவுள்ளது. இதற்கு கவனம் செலுத்தும் வகையில் ஸ்டார்க் இந்த ஆண்டு மினி ஏலத்தில் தனது பெயரை பதியவில்லை. இதனால் இவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இவர் கடைசியாக 2015ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here