சசிகலா வருகையை முன்னிட்டு பேரணி – காவல் ஆணையர் அனுமதி மறுப்பு!!

0

தமிழகத்திற்கு சசிகலா வரும் 8ம் தேதி அன்று வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு சென்னையில் பேரணி நடத்த காவல் ஆணையரிடம் அமமுக சார்பில் மனு வழங்கப்பட்டது. இதற்கு காவல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சசிகலா:

சிறைத்தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு சசிகலா வரும் 8ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை டிடிவி தினகரன் தெரிவித்தார். தற்போது இவரது வருகையை முன்னிட்டு அமமுக கட்சி சார்பில் பெரும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பும் பொழுது அவரது காரில் அதிமுகவின் கோடி பறக்கவிடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். மேலும் இவரது வருகைக்காக சென்னையில் சில இடங்களில் அதிமுகவின் கோடியை ஏற்றி சில நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாடி வருகின்றனர். இது குறித்து அதிமுகவினர் ஏற்கனவே டிஜிபி இடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் வருகைக்காக பேரணி நடத்த அமமுக கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனு நிராகரிப்பு:

இதனை தொடர்ந்து சென்னை போரூரில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை 12 இடங்களில் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பேரணி நடத்தப்படும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி அளிக்கவேண்டும் என்று அமமுக சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த காவல் ஆணையர் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்ளப்போகிறார்காள் என்ற விவரங்களையும் கேட்டு அறிந்துள்ளார்.

காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை – குஷியில் மக்கள்!!

மேலும் இதுகுறித்து சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஆலோசனைக்கு பின்பு தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் இவர்களது மனுவை நிராகரித்துள்ளார். அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை வர வாய்ப்புள்ளது. மேலும் ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் மனுவை அளித்துள்ளனர். எனவே உரிய அனுமதியின்றி கூட்டங்கள் நடத்தினாலோ அல்லது பேரணி சென்றாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here