#INDvsENG டெஸ்ட் – கேப்டன் ரூட் அசத்தல் பேட்டிங்!! திணறும் இந்தியா!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எடுக்க இந்தியா அணியின் பௌலர்கள் திணறி வருகின்றனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களம் வந்த பர்ன்ஸ் மற்றும் சிப்லே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்களை குவித்தது. இந்நிலையில் பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் வீழ்ந்தார். அடுத்து களம் வந்த லாரன்ஸ் 0 பும்ராஹ் வேகத்தில் சரிந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு கேப்டன் ரூட் மற்றும் சிப்லே இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்தனர். இருவரும் இந்தியா அணியின் பந்துவீச்சை நன்கு கணித்து அருமையாக விளையாடினர். இறுதியில் இங்கிலாந்து அணி கேப்டன் தனது 20 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இது இவரது 100 வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து சிப்லேவும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சிப்லே 87 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராஹ்விடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

திணறும் இந்தியா:

இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இங்கிலாந்து அணி 263 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து இருந்தது. களத்தில் ரூட் 128 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது. அப்போது ரூட்டுடன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் தற்போது மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 150 ரன்களை கடந்து அசத்தினார். தனது பங்கிற்கு ஸ்டோக்சும் அரை சதத்தை கடந்துள்ளார்.

நடிகர் அஜித் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார் – பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான நிலையில் இருக்கின்றனர். இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமால் இந்தியா அணியின் பௌலர்கள் திணறி வருகின்றனர். இதற்காக இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பல முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனில்லாமல் தான் போய்யுள்ளது. தற்போது உணவு இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இடைவெளிக்கு பின்பு ஆட்டம் தொடரும்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து -355/3

ரூட் -156*
ஸ்டோக்ஸ் -63*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here