வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்ணம்மாவிற்கு கட்டாயப்படுத்தி கொடுக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவின் சதித்திட்டம் தெரியாமல் கொடுத்த விஷமருந்தை கண்ணம்மா சாப்பிட்டு விடுகிறார். அடுத்தடுத்து கண்ணம்மாவின் நிலை என்ன ஆக போகிறது என்று தான் தெரியவில்லை.

பாரதி கண்ணம்மா

இந்த சீரியலில் ஹேமா அகிலனை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். திடீரென அகிலனுக்கு முக்கியமான போன் கால் வர அகிலன் அஞ்சலியை மட்டும் அனுப்பி வைக்கிறார். அதன் பின் லட்சுமி பாரதியை பார்க்க செல்ல இருப்பதை பார்த்து பார்த்து கடுப்பாகிறார்.

பாரதி ஆபரேஷன் விஷயமாக வெளியே செல்ல வேண்டி இருப்பதால் மருந்துகளை எழுதி தருகிறார். அதில் இது தான் என்று வெண்பா விஷ மருந்தையும் சேர்த்து வைக்கிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வழக்கம் போல கண்ணம்மாவை நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார்.

ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிந்தால் ஹேமா நம்மை விட்டு போய்விடுவாளோ என்று வருத்தப்படுகிறார். ஹேமா வீட்டிற்கு தான் கொலுசை கண்ணம்மாவின் வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் அதனை எடுக்க சென்றதாகவும் சொல்லுகிறார்.

சௌந்தர்யாவிற்கு சமையல் காரி நல்லவங்களா?? கெட்டவங்களா?? என்ற பயம் ஏற்படுகிறது. அதன் பின் பாரதியை காட்டுகின்றனர். பாரதியும் வெண்பாவும் ரோடில் பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது குடுகுடுப்புகாரன் அங்கு வர பாரதியை பார்த்தே அவரின் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லுகிறார்.

விஷ பாம்புடன் பழக்கம் வைத்திருப்பதாகவும், இதனால் பல பிரச்சனை ஏற்படப்போவதாகவும் சொல்லுகிறார். மேலும் உங்களுக்கு இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லுகிறார். இதனால் வெண்பா குஷியாகிறார். அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட லட்சுமி பாரதியின் ஹாஸ்பிடலில் வாங்கி வந்த மருந்துகளை தருகிறார்.

பாரதி மேல் இருக்கும் கோவத்தில் அதனை சாப்பிட மறுக்க லட்சுமி கட்டாயப்படுத்தி போட வைக்கிறார். அதில் வெண்பா கொடுத்த விஷ மருந்தும் இருக்க நடந்ததை அறியாமல் அந்த மாத்திரைகளை சாப்பிட்டு விடுகிறார். சாப்பிட்டதும் கண்ணம்மாவிற்கு என்னவோ போல இருக்க கொள்கிறார்.

வெண்பா வீட்டில் கண்ணம்மாவிற்கு விஷ மருந்தை சந்தோஷமடைகிறார். மேலும் கண்ணம்மா விரைவில் செத்து விடுவாள், பாரதியை கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here