பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை – சட்டதிருத்த மசோதா!!

0

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 10 வருட சிறைத்தண்டனையை அறிவித்து திருத்தப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

10 வருட சிறை தண்டனை

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. என்னதான் கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக மாற்ற மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மசோதா திருத்தப்பட்டு குற்றங்களுக்கான தண்டனை 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா வருகையை முன்னிட்டு பேரணி – காவல் ஆணையர் அனுமதி மறுப்பு!!

தமிழக சட்டப்பேரவை தாக்கல் செய்யப்பட்டிருந்த மசோதாவில், ‘2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, இந்திய தண்டனை தொகுப்பு சட்டம் 304பி, 354பி, 354டி, 372, 373 ஆகிய பிரிவுகளில் தண்டனையை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 வருட சிறை தண்டனையை 10 வருடமாக அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் 3 ஆண்டுக்கான தணடனை 5 ஆண்டுகளாகவும், 7 ஆண்டுகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த தண்டனையை குறைக்காதபடி, குற்றம் செய்பவருக்கு ஆயுள் முழுதும் சிறை தண்டனையை நீட்டித்து மாற்றி திருத்தப்படுகிறது’ என கூறப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அறிவித்துள்ள புதிய திருத்த சட்டத்தின் படி, தவறான நோக்கத்தோடு பெண்களை பின்தொடர்வதும், குற்றமிழைத்தாலும் கிடைக்கும் 5 ஆண்டு சிறைத்தண்டனையை 7 ஆண்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் நோக்கில் விற்பனை செய்வதும் விலைக்கு வாங்குவதுமான குற்றத்திற்கு, பிரிவு 372 ன் படி தண்டனை காலம் 10 லிருந்து 7 ஆண்டாக குறைத்து, அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கும்படி புதிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here