மத்திய அரசு துறையில் 6,000 காலிப்பணியிடங்கள், ரூ.81 ஆயிரம் சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க!!

2
ssc
ssc

எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறையின் உள்ள பல்வேறு துறைகளில் போஸ்டல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. மொத்தம் 6,000 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்களுக்கான ரூ.81,100 வரையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களை கீழே காண்போம்.

காலிப் பணியிடங்களின் விவரம் மற்றும் ஊதியம்

மத்திய அரசு துறையில் உள்ள 6,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தேர்வாணையம் நவ .6 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது.

job opportunity
job opportunity

அதில் “போஸ்டல் அசிஸ்டன்ட்” பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு பெற்ற பணியாளருக்கு மாதம் ஊதியம் ரூ. 25,000 முதல் 81,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:

போஸ்டல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு கண்டிப்பாக 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதியின் படி, குறிப்பிட்ட பிரிவின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

போஸ்டல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர் https://ssc.nic.in/என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்படும் அனைத்து சான்றிதழ்கள் பற்றிய முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

employee
employee

ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினர் விண்ணப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மற்றும் இ.எஸ்.எம். போன்ற பிரிவினர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவை இல்லை. கடைசி தேதியான 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்பு தட்டச்சுத் திறன், திறன் சோதனை மற்றும் கணினி அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here