கடைசி பந்தால் பறிபோன ராஜஸ்தானின் வெற்றி…, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அசத்தல்!!

0
கடைசி பந்தால் பறிபோன ராஜஸ்தானின் வெற்றி..., 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அசத்தல்!!
கடைசி பந்தால் பறிபோன ராஜஸ்தானின் வெற்றி..., 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அசத்தல்!!

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, கடைசி பந்தில், ஹைதராபாத் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

SRH vs RR:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், 52 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்து இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், ராஜஸ்தான் சார்பாக, ஜோஸ் பட்லர் (95), சஞ்சு சாம்சன் (66*) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்கள் எடுத்த்திருந்தனர். இதனை தொடர்ந்து, 215 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. இதில், அன்மோல்பிரீத் சிங் (33), அபிஷேக் சர்மா (55), ராகுல் திரிபாதி (47), ஹென்ரிச் கிளாசென் (26), க்ளென் பிலிப்ஸ் (25) என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆனாலும், கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. இதனால், ராஜஸ்தானின் சந்தீப் சர்மா இந்த டெத் வரை வீசினார். இதில், முதல் 5 பந்துகளில் 12 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்த நிலையில், கடைசி பந்தில் மட்டும் 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தீப் சர்மா நோ பாலாக வீச, மீண்டும் கடைசி பந்து வீசப்பட்டது. இந்த பந்தை அப்துல் சமது சிக்ஸர் தூக்கி விடவே, ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here