IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?? வெளியான புள்ளி பட்டியல்!!

0
IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?? வெளியான புள்ளி பட்டியல்!!
IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?? வெளியான புள்ளி பட்டியல்!!

பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், புள்ளிப் பட்டியல் தற்போது புதுப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தற்போது பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பங்குபெற்றுள்ள 10 அணிகளில், குஜராத் (GT), சென்னை (CSK), லக்னோ (LSG) மற்றும் ராஜஸ்தான் (RR) ஆகிய 4 அணிகள் தலா 11 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. மீதமுள்ள 6 அணிகளும் தலா 10 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இதுவரை நடந்த போட்டிகளின் முடிவை பொறுத்து ஐபிஎல்லுக்கான புள்ளிப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம், குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகி உள்ளது. இதனை தொடர்ந்து, CSK அணி 11 போட்டிகளில் 6 ல் வெற்றி 1 ரத்து என 13 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், லக்னோ (LSG) அணி 11 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளனர்.

கடைசி பந்தால் பறிபோன ராஜஸ்தானின் வெற்றி…, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அசத்தல்!!

இனி வரும் ஆட்டங்களில், மேற்கண்ட அணிகள் சிறப்பாக வெளிப்படுத்தும் பட்சத்தில், பிளே ஆப் சுற்றுக்கு இந்த 4 அணிகளே முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புள்ளிப் பட்டியலில், தலா 10 புள்ளிகளுடன் RCB, MI, PBKS அணிகள் 5, 6 மற்றும் 7 வது இடத்தில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, KKR, SRH மற்றும் DC ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here