பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர் திரும்புபவரா நீங்கள்? இந்த முக்கிய நியூஸ் உங்களுக்குத்தான்!!

0
பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர் திரும்புபவரா நீங்கள்? இந்த முக்கிய நியூஸ் உங்களுக்குத்தான்!!
பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர் திரும்புபவரா நீங்கள்? இந்த முக்கிய நியூஸ் உங்களுக்குத்தான்!!

தமிழர்களின் கலாச்சார பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு செயல்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் எந்தவித இடையூறு மற்றும் நெரிசல்கள் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து இன்று (17.01.2023) காணும் பொங்களுடன் விடுமுறைகள் அனைத்தும் முடிய உள்ளதால் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப உள்ளனர். இதற்காக பேருந்துகளின் முன்பதிவு விரைவாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வசதியாக நகரங்களுக்கு திரும்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டால் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.., முதல்வர் அதிரடி உத்தரவு!!

அதாவது ஜனவரி 16ல் இருந்து 18ம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து தினசரி சென்னைக்கு இயக்கப்படும் 2100 பேரூந்துகளுடன் கூடுதலாக 4334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களில் 15,599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here