சர்வதேச அளவில் டாப் 5ல் நுழைந்த விராட் கோலி…, தொடரும் சாதனை பட்டியல் இதோ!!

0
சர்வதேச அளவில் டாப் 5ல் நுழைந்த விராட் கோலி..., தொடரும் சாதனை பட்டியல் இதோ!!
சர்வதேச அளவில் டாப் 5ல் நுழைந்த விராட் கோலி..., தொடரும் சாதனை பட்டியல் இதோ!!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியாவின் விராட் கோலி 150 க்கு மேல் ரன் அடித்தன் மூலம் பல சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதில், சிலவற்றை இப்பதிவில் காணலாம்.

விராட் கோலி:

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக, 3 வது ஒருநாள் போட்டியில், 317 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த விராட் கோலி 110 பந்தில் 13 பவுண்டரி 8 சிக்ஸர் உட்பட 166* ரன்கள் எடுத்து அசத்தி, சர்வதேச அளவில் தனது 74 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் விராட் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதில் சிலவற்றை குறித்து இப்பதிவில் காணலாம். அதாவது, ஒருநாள் போட்டிகளில், விராட் கோலி 12,754 ரன்கள் எடுத்து சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பட்டியலில் இணைந்தார். இந்த பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் (18426), குமார் சங்கக்கார (14234), ரிக்கி பாண்டிங் (13704), சனத் ஜெயசூரிய (13430) டாப் 4 ல் உள்ளனர்.

“சவால்களை சமாளிக்க தயார்”…, விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்-டின் முதல் பதிவு!!

இதே போல, ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்த வீரர்களுக்கான பட்டியலிலும் விராட் கோலி 2 வது இடத்தை பிடித்துள்ளார். இவர், இதுவரை 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 6 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து முதலிடத்தில் உள்ளார். இதில், இந்தியாவின் ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் 4 முறை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here