தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை

கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய இலோசனது முதல் மிதமான மழையும்,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப் பெறக்கூடும் என்றும், இது நாளை மாலை, மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பேச்சிப்பாறையில் 9 செ.மீ. மழையும், கரூர் பரமத்தியில் 8 செ.மீ. மழையும், குழித்துறை, துவக்குடியில் தலா 6 செ.மீ. மழையும், திருக்காட்டுப்பள்ளி, கன்னிமார் பகுதியில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து நாளை பிற்பகல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here