நடுவானில் 100 அரசுப்பள்ளி மாணவர்களுடன் விமானத்தில் வெளியிடப்பட உள்ள ‘சூரரைப் போற்று’ பட பாடல்..!

0

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஆனது இன்று நடுவானில் விமானத்தில் 100 அரசுப்பள்ளி மாணவர்களுடன் வெளியிடப்பட உள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதை..!

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை வைத்து உருவாகும் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடுவானில் வெளியீடு..!

இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஆனது விமானத்தில் இதுவரை செல்லாத 100 அரசுப்பள்ளி மாணவர்களுடன் படக்குழுவினர் இணைந்து நடுவானில் விமானத்தில் இந்த பாடலை ஸ்பைஸ்ஜெட் பிரத்யேக விமானத்தில் வெளியிட உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here