விண்வெளி வீரர் ஆவது கனவா..? 50 லட்சம் சம்பளத்துடன் அழைக்கிறது நாசா..!

0

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனது நிறுவனத்திற்கு அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்த முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளது.

நாசாவின் புதிய திட்டங்கள்..!

வரும் காலங்களில் நாசா புதிய விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதற்காக புதிய தலைமுறை விண்வெளி வீரர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவதால் இந்த அறிவிப்பை நாசா வெளியிட்டு உள்ளது. எனவே சிறு வயது முதலே விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்கள் இதற்காக விண்ணப்பித்து தங்களது அறிவுத்திறமையை வெளிப்படுத்தலாம்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நிலவுக்கு விண்வெளி வீராங்கனை..!

நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிடென்ஸ்டைன் வெளியிட்ட அறிக்கையில், நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. 2024ம் ஆண்டு முதல் பெண் விண்வெளி வீராங்கனை மற்றும் ஒரு ஆண் வீரர் நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தில் தற்போது நாசா கவனம் செலுத்தி வருகிறது.

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து, பணியமர்த்த முடிவு செய்து உள்ளோம். எனவே அதற்கான கனவுடன் இருக்கும் அமெரிக்கர்கள் வரும் மார்ச் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தேர்வு செய்யும் முறை..!

விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்களுக்கு இரண்டு மணி நேர, ‘ஆன்லைன்’ தேர்வு இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும். இறுதியாக அதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 38 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here