உங்க வேகத்துக்கு அளவே இல்ல.., மித்தாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி.., மாஸ் காட்டிட்டீங்க!!

0
உங்க வேகத்துக்கு அளவே இல்ல.., மித்தாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி.., மாஸ் காட்டிட்டீங்க!!
உங்க வேகத்துக்கு அளவே இல்ல.., மித்தாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி.., மாஸ் காட்டிட்டீங்க!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வின் அசத்தலான ஆட்டத்தால் சாதனை புரிந்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா

இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், நேற்று 2 வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் மூலம் 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்ததன் மூலம் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை அடைந்துள்ளார்.

ICC ஆடவர் தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபருக்கு டாட்டா காட்டி முன்னறிய சூர்ய குமார்!!

இவர் தனது 76 இன்னிங்ஸில் 3000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இவருக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மித்தாலி ராஜ் 88 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் சாதனையை தற்போது ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here