தெலுங்கில் அறிமுகமாகவுள்ள சிவகார்த்திகேயன்?? – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட்டில் ஜாதி ரத்னாளு என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அனுதீப் என்பவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். தமிழ் நாட்டில் முன்னனி நடிகர்களுக்கு உண்டான ரசிகர் கூட்டம் சிவகார்த்திகேயனுக்கும் உள்ளது. வெள்ளித்திரையில் இவர் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் இவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை, ரஜினி முருகன், சீம ராஜா, ரெமோ, வேலைக்காரன், கனா, நம்ம வீட்டு பிள்ளை என பட வாய்ப்புகள் குவிந்தன.தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகவுள்ளது. மேலும் அயலான், டான் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்புதிய படம்  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here