ரோகினியின் சதி வலையில் சிக்கும் முத்து.., மீனாவிடம் கொந்தளிக்கும் அண்ணாமலை.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
ரோகினியின் சதி வலையில் சிக்கும் முத்து.., மீனாவிடம் கொந்தளிக்கும் அண்ணாமலை.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஸ்ருதி ரவியின் தாலி பெருக்கு விழாவில் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விட கூடாது என அண்ணாமலை மீனா இருவரும் பயந்து கொண்டிருக்கின்றன. இந்த பக்கம் ஸ்ருதியின் அம்மா முத்துவின் கோபத்தை எப்படியாவது சீண்டி பிரச்சனை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் முத்து என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கிறார். இதனால் ஸ்ருதியின் அம்மாவால் எதுவும் செய்ய முடியவில்லை.
இன்னொரு பக்கம் மீனா அந்தப் பக்கம் சென்ற நேரம் பார்த்து ரோகினி செட் செய்துள்ள ஆள் முத்துவை குடிக்க அழைத்துச் செல்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினின் சதி படி முத்து குடித்துவிட்டு மண்டபத்தில் பிரச்சனை செய்வாராம். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை மீனாவிடம் நீ எதுக்கு முத்துவை தனியாக விட்டுட்டு போன என சத்தம் போடுவாராம். மேலும் முத்து செய்த பிரச்சனயால் ரோகினி விஜயாவிடம் இருந்து சுலபமாக தப்பித்து விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here