தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

0
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மார்ச் 26) முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here