மக்களவை தேர்தல்: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? ஐகோர்ட் பிறப்பித்த பதில் உத்தரவு!!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 45 நாட்களுக்கு பிறகு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு பதிலாக முன்கூட்டியே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும்., தமிழக பதிவுத்துறை உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here