
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது அனைவரது கோபமும் மீனாவின் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் ரோகிணி இப்போது நமக்கு எந்த தொந்தரவு வராது என நிம்மதியாக இருக்கிறார். இந்த நேரத்தில் PA கொரியர் பாய் போல் வீட்டுக்கு வந்து ரோகிணியை மிரட்டி விட்டு செல்கிறார். இதை மீனா பார்த்து விடுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அந்த PA அடிக்கடி கொரியர் பாய் போல் வீட்டுக்கு வந்து ரோகிணியிடம் பேச்சுக் கொடுப்பாராம்.

இதை விஜயா கண்டுபிடித்து விடுவாராம். உடனே விஜயா அந்த கொரியர் பாயிடம் நீ எதுக்கு இங்க அடிக்கடி வரீங்க என்று கேட்பாராம். உடனே அவர் ரோகிணியை பார்த்து நீங்க இன்னும் உண்மையை சொல்லலையா என்பாராம். உடனே விஜயா அதிர்ச்சியாகி என்ன விஷயம் என்று கேட்க ரோகிணி அதெல்லாம் ஒன்னும் இல்லை லெட்டர் பத்தி தான் அவரு சொல்றாரு என சமாளித்து விடுவாராம்.