ஆசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறாங்க.., ரசிகர்கள் செயலால் குமுறும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!!!

0
ஆசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறாங்க.., ரசிகர்கள் செயலால் குமுறும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது TRP ல் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் வில்லியாக விஜயா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் அனிலா ஸ்ரீகுமார். இந்நிலையில் இவர் தனது சினிமா பயணம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது 33 வருடங்களாக நான் சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன்.

ஆனால் இந்த 33 வருடங்களில் இல்லாத பேரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. அதே சமயம் இந்த சீரியல் மூலம் எனக்கு பல நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் உள்ளது. நான் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டால் அதற்கு பலரும் என்னை பாராட்டுகின்றனர். ஆனால் ஒரு சிலர் நீங்கள் மீனாவை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள். உங்களைப் பார்த்தால் முகத்தில் ஆசிட் அடிக்காமல் விடமாட்டேன் என மிரட்டுகின்றனர். இது ஒரு சில நேரம் பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் சில நேரங்களில் ரசிகர்கள் பேசுவது சிரிப்பாக தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here