ரோகினியின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் மீனா.., முத்துவின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர்!!!

0
ரோகினியின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் மீனா.., முத்துவின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியின் தாலி பெருக்கு விழாவில் முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என ஸ்ருதியில் அம்மா எச்சரிக்கிறார். இதனால் முத்து இந்த விழாவிற்கு வரவில்லை என மறுக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் அவரை சமாதனப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். இப்படி இருக்கையில் ஒரு பக்கம் ரோகினி, இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா இருவரும் சேர்ந்து எப்படியாவது முத்துவின் கோபத்தை தூண்டி விட்டு இந்த நிகழ்ச்சியில் அவரை பிரச்சனை செய்ய வைக்க வேண்டும் என பல திட்டங்கள் தீட்டுகின்றன. ஆனால் அதுபோன்று எதுவும் நடக்க கூடாது என்பதற்காக மீனா முத்துவின் பக்கத்திலேயே இருக்கிறார்.

இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினி முத்துவை குடிக்க வைக்க ஏற்பாடு செய்வாராம். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா முத்துவுக்கு கோபம் வரும்படி குத்தி காண்பித்து பேசுவாராம். இதை பார்த்த அண்ணாமலை நிச்சயம் முத்து பிரச்சனை செய்யப் போகிறார் என மனதுக்குள் நினைப்பாராம். ஆனால் இவர்கள் நினைத்ததற்கு மாறாக முத்து அவர்கள் பேசிய எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருப்பாராம். இதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here