சமந்தாவை தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் நடிகர் சித்தார்த்? – அவரே கூறிய பதில்!!

0

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தம்பதி சமந்தா – நாக சைதன்யா. சில நாட்களுக்கு முன்பு தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து செய்தியை அறிவித்த அன்றைய தினமே சமந்தாவின் முன்னாள் காதலர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் “பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் நான் கற்றுக் கொண்ட முதல் படம், ஏமாற்றுகிறவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை” என நக்கலாக ஒரு பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து மற்றொரு நாளே இன்னொரு நக்கல் பதிவை வெளியிட்டு சிறிது நேரத்திலேயே அந்த பதிவை நீக்கினார்.

Hyderabad 6th october 2013:Sidharth and Samantha at the Charity Event Oraganised by The Project 511 called FOOD FOR CHANGE at N Convention on Sunday

சமந்தாவை தான் சித்தார்த் தொடர்ந்து கலாய்ப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சித்தார்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் “யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்” என விளக்கம் அளித்துள்ளார்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here