சச்சினையே பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்…, ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி அபாரம்!!

0
சச்சினையே பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்..., ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி அபாரம்!!
சச்சினையே பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்..., ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி அபாரம்!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினையே பின்னுக்கு தள்ளி அசத்தி உள்ளார்.

சுப்மன் கில்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில், 349 ரன்களை குவித்து அசத்தியது. இதையடுத்து, இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 337 ரன்களுக்குள்ளே சுருண்டது. இதனால், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்தியாவின் சுப்மன் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி 9 சிக்ஸர் உட்பட 208 ரன்கள் எடுத்து அசத்தி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், சுப்மன் கில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியலில் சச்சினை (186) பின்னுக்கு தள்ளி, சுப்மன் கில் (208) முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், ஒருநாள் போட்டியில் மிக இளம் வயதில் (23 வயது 132 நாட்கள்) இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் தட்டி சென்றார். இதற்கு முன் இஷான் கிஷன் (24 வயது 145 நாட்கள்) இந்த சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் மிக குறைந்த இன்னிங்ஸில் (19) மூன்று சதங்களை அடித்த 2வது இந்திய வீரரானார். தவான் 17 இன்னிங்ஸில் 3 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here