வைகைப்புயல் வடிவேலு தாயார் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய குடும்பம்! ரசிகர்கள் கண்ணீர்!!

0
வைகைப்புயல் வடிவேலு தாயார் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய குடும்பம்! ரசிகர்கள் கண்ணீர்!!
வைகைப்புயல் வடிவேலு தாயார் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய குடும்பம்! ரசிகர்கள் கண்ணீர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலுவின் தாயார், தனது 89 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.

அதிர்ச்சி மறைவு:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு, இதுவரை பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மதுரையை, சேர்ந்த காமெடி நடிகர் என்பதால் இவருக்கு வைகை புயல் என்ற பட்டம் மக்களால் கொடுக்கப்பட்டது. வடிவேலுவின் தாயார் பாப்பா என்ற வைத்தீஸ்வரி, மதுரை விரகனூரில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் தவித்து வந்த, இவர் தனது 89ஆம் வயதில் நேற்று இரவு திடீரென உயிரிழந்தார்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட தாயார் மறைவு வடிவேலு குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இதையடுத்து வடிவேலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here