தமிழகம் முழுவதும் அக்.8ம் தேதி கடையடைப்பு போராட்டம் – தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

0

திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.8ம் தேதி சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும் என சவரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சரவத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ராஜா அவர்கள் வெளியிட்டு உள்ளார்.

கடையடைப்பு போராட்டம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி எனும் கிராமத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரது 12 வயது மகள் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 19 வயதான கிருபானந்தன் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

sexual abuse
sexual abuse

மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் கடந்த செப்.30ம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையில் குற்றவாளிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கூறிய நீதிபதி, கிருபானந்தனை விடுதலை செய்து உத்தரவிட்டார். இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து வரும் அக்.8ம் தேதி மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என சரவத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என மக்கள் கூறி வருகின்றனர். தேசிய குற்ற ஆவண பதிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 87 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் அரபு நாடுகளைப் போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here