‘புகழ் அண்ணா எனக்கு எப்போவுமே இப்படி தான்’ – ரசிகர்களை கண்கலங்க வைத்த ஷிவாங்கி!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷிவாங்கி நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். தற்போது ஒரு கடை திறப்பு விழாவில் அஸ்வின் பற்றியும், புகழ் பற்றியும் மனம் திறந்துள்ளார்.

ஷிவாங்கி

ஷிவாங்கி தனது குழந்தை தனமான பேச்சாலும், செய்கையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். இதற்கு முழு காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதுவும் ஷிவாங்கியும், அஸ்வினும் இணைத்து எந்த புகைப்படம் போட்டாலும் இணையத்தில் ட்ரெண்டாகும். அதுவும் ஷிவாங்கி ஒரு ஸ்லாங்கில் அஷ்வினே என்று கூப்பிடுவது தான் ஹைலைட்.

ஆனாலும் ஷிவாங்கிக்கு புகழ் மீது அபரிவிதமான அன்பு என்றே சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியில் கூட அஸ்வின் புகழ் இணைத்திருக்கும் போது அஸ்வின் புகழை அடிக்க கோவமான ஷிவாங்கி அஸ்வினிடம் வந்து, உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் தான், ஆனாலும் அவரு என் அண்ணன் அடிக்காதிங்க என்று சொல்லிவிட்டு சென்றார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இப்பத்தான மீண்டு வந்தீங்க, அதுக்குள்ள இப்படியா?? – நடிகர் சூர்யாவுக்கு நடந்த சோகம்!

இதே போல தான் தற்போதும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. பிரபல ஹோட்டல் திறப்பு விழாவுக்கு ஷிவாங்கி சென்றிருந்தார். அதில் ஷிவாங்கியிடம் புகழ் புடிக்குமா?? அஸ்வின் புடிக்குமா?? என்று கேட்டதற்கு அனைவரும் நெகிழும் படியான பதிலளித்துள்ளார். அதாவது, தனக்கு முதலிடம் எப்பொழுதுமே புகழ் அண்ணா தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். எப்பொழுதுமே செட்டில் என்னோட கேர் டேக்கர் அவர் தான். என் ஹார்ட்ல அவருக்கு எப்பொழுதுமே இடம் இருக்கும். அஸ்வினும் அதே மாதிரி தான். எனக்கு நல்ல நண்பர் என்று கூறியுள்ளார். இந்த பதில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here