பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரியங்கா சென்ற நேரம் பார்த்து ஆப்பு வைத்த விஜய் டிவி – இனிமேல் அவ்வளவு தானா??

0
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் பிரியங்கா மற்றும் ம.க.பா தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவருக்கு பதிலாக தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை சிவாங்கி தொகுத்து வழங்க உள்ளார்.

பிரியங்கா கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது காமெடியான பேச்சு, சரளமாக பேசும் திறன் ஆகியவற்றிற்காகவே இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது தொகுத்து வழங்குதலை காணவே பலர் அந்த நிகழ்ச்சிகளை கண்டு கழித்து வந்தனர்.

தற்போது பிரியங்கா பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இயலாது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை இவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற பேச்சுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

நடிகர் நரேனின் அழகான மனைவி குழந்தைகளை பார்த்துளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

இந்நிலையில் தான் தற்போது புதிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்த ஷிவாங்கி இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.

சிவாங்கியின் குறும்புத்தனம், பேச்சு ஆகியவற்றிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது தொகுப்பாளினி பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி இதில் தொகுத்து வழங்கவுள்ள செய்தியை கேட்டு பலரும் ஆர்வத்தில் உல்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here