மாஸ்க் அணியவில்லை என்றால் கடும் நடவடிக்கை – அதிகாரிகள் எச்சரிக்கை..!

0
lockdown
lockdown

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 12 நாட்களுக்கு அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஜூன் 21 உடன் உலகம் அழியப் போகிறதா..? சர்ச்சையை கிளப்பிய மாயன் காலண்டர்..!

Mask
Mask

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தனர். மேலும் வெளியிடங்களுக்கு மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here