லாக்டவுனில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங் – கேள்விக்குறியாகும் சீரியல்கள் நிலை?? கலக்கத்தில் மக்கள்!!

0

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக வேகமாக பரவி வரும் நிலையில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மேலும் படப்படிப்புகள் யாவும் நிறுத்தப்பட்ட நிலையில் சீரியல் நேரத்தை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டாவது அலையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். இது பெரும் சோகத்தை தான் ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்காக காலை 6முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது கொரோனா அபாயத்தால் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க வாய்ப்பில்லை. இதனால் சீரியல்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சன் டிவியில் 24 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் எபிசோடு 20 நிமிடங்களாக குறைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் மற்றும் ஜீ தமிழில் பழைய எபிசோடுகளை திரும்ப ஒளிபரப்ப போவதாக சொல்லப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். ஏனெனில் லாக்டவுனில் பொழுதுபோக்கிற்காக இருந்த சீரியலும் நிறுத்தப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here