
சீரியலில் ஜோடியாக நடித்த பலரும் சமீப காலமாக ரியல் வாழ்க்கையிலும் ஜோடி சேருவது தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த சம்யுக்தா மற்றும் விஷ்ணு வரதன் 8 மாதங்களாக காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காதலித்த போது இல்லாத சண்டைகள் கல்யாணத்திற்கு பிறகு பூகம்பம் போல் கிளம்ப தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து சண்டைகளாகவே இருந்ததால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து, சோசியல் மீடியாவில் ஒருவொருக்கொருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதில் யார் சொல்வது உண்மை பொய் என்று கணிக்க முடியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தாம் உயிரோடு இருக்க காரணம் குறித்து பதிவிட்டுள்ளார்.
TNPSC குரூப் 1,2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு…, மிஸ் பண்ணாம இந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கோங்க!!
அதாவது, இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஆரம்பத்தில் இருந்து என் கூட இருந்த அனைவரும் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுனார்கள். தற்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து ஏராளமானோர் அன்பு காட்டுகிறார்கள். எனவே உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வாழ்வதற்கு தகுதியானவள் தான் என்று உணர்த்தியுளீர்கள். உங்களால் தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.