அமெரிக்க ஜாம்பவான் ஓய்வு – ரசிகர்கள் & சக வீரர்கள் பிரியாவிடை!

0
அமெரிக்க ஜாம்பவான் ஓய்வு - ரசிகர்கள் & சக வீரர்கள் பிரியாவிடை!
அமெரிக்க ஜாம்பவான் ஓய்வு - ரசிகர்கள் & சக வீரர்கள் பிரியாவிடை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3 ஆவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியுடன் ஓய்வு பெறுகிறார்.

செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார். மேலும் இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவு 3 வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிச்சை எதிர்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட செரீனா 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியுடன் செரினா தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார். மேலும் இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நிலையில் இன்னும் ஒரு பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here