IND VS PAK – இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.., ரிஸ்வான் சர்ச்சைகுரிய பேட்டி! நடக்கப்போவது என்ன?

0
IND VS PAK - இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.., ரிஸ்வான் சர்ச்சைகுரிய பேட்டி! நடக்கப்போவது என்ன?
IND VS PAK - இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.., ரிஸ்வான் சர்ச்சைகுரிய பேட்டி! நடக்கப்போவது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை கண்டிப்பாக வீழ்த்துவோம் என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா வெற்றி பெறுமா?

ஆசிய கோப்பை தொடருக்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதியது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. ஏனென்றால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் இந்திய அணியை சந்திக்க உள்ளது. இதனால் இந்த ஆட்டம் களை கட்டியது. அதன்படி இரு அணிகளும் நேற்றைய போட்டியில் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை 38 ரன்களுக்குள்ளே சுருட்டி தோல்வி அடைய வைத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் கடைசியில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அடுத்ததாக இந்திய அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது. மேலும் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரிஸ்வான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதாவது இந்த போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் அடுத்து ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறுவதே தற்போதைய குறிக்கோளாக உள்ளது. ஏற்கனவே நாங்கள் அந்த அணியிடம் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் அந்த தோல்வியை சமன் செய்யும் வகை வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.

அந்த அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார் போன்றோர் சிறப்பாக பந்து வீசி எளிதாக விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் அடுத்த போட்டியில் இவர்களை சமாளிப்பதற்கான வழிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தற்போது எங்கள் அணியின் மீது அதிக நம்பிக்கை உள்ளதால் அதை காப்பாற்றும் விதமாக எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளோம் என சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் நாளை நடைபெற போகும் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here