உயிருக்கு பெரும் ஆபத்து., கெஞ்சி கூத்தாடிய போலிச் சாமி நித்தியானந்தா – அரசுக்கு உருக்கமான கடிதம்!!

0
உயிருக்கு பெரும் ஆபத்து., கெஞ்சி கூத்தாடிய போலிச் சாமி நித்தியானந்தா - அரசுக்கு உருக்கமான கடிதம்!!

கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியுள்ள போலிச் சாமி நித்யானந்தா உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, தனக்கு மருத்துவ சிகிச்சை செய்து உதவ வேண்டும் என இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிபருக்கு கடிதம்:

தன்னைத் தானே சுயமாக, மடாதிபதி என்று அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா கடவுள் தன்னிடம் பேசி வருவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  மேலும், நான் சொன்னால் சூரியன் உதிப்பதும், உடனே நின்று போகும் என வதந்தியை அள்ளி விட்டார். தனது சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இவருக்கு பிடிவாரண்ட்  போடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?

அதிலிருந்து தப்ப, நாட்டை விட்டு ஓடிய  நித்யானந்தா கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, தனக்கு உடனே மருத்துவ சிகிச்சைகள் செய்து தர வேண்டும் என இலங்கை அதிபர்  ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் ஒன்றை நித்தி எழுதியுள்ளார்.

இந்த அவசர உதவிக்கான, மொத்த செலவையும் தனது கைலாசா ஏற்றுக்கொள்ளும் என்றும், தனக்கு அந்த உதவியை மட்டும் செய்து தர வேண்டும் என  கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். நித்தியின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here