செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானாவா இது?? குழந்தைல எப்படி இருகாங்க பாருங்க!!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் ஷபானாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வந்தது. அகிலாண்டேஸ்வரி வீட்டில் வேலைக்காரியாக நுழைந்து ஆதியின் மீது காதல் வயப்படுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.

நாளடைவில் ஆதியும் பார்வதியை காதலிக்க ஆரம்பிக்க அகிலாவுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொள்கிறார். இருவருக்குள்ளும் இருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து போகவே மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் பார்வதி.

ஆதி பார்வதி ஜோடி தான் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆனால் திருமணத்தை பற்றி அகிலாவிடம் தொடர்ந்து மறைத்து வந்ததால் ரசிகர்கள் மிகவும் கடுப்பாக தான் செய்தனர். அகிலா வேறு அடிக்கடி துப்பாக்கியை தூக்குவதால் கேலி , கிண்டலுக்கும் ஆளானார்.

தற்போது செம்பருத்தி சீரியலில் கதையே இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் ஷபானாவுக்காக தான் அனைவரும் சீரியலை பார்த்தும் வருகின்றனர். இந்நிலையில் ஷபானாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here