டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலை வெளியிட்டது ஐசிசி… முதலிடத்தை பிடித்த வீரர் யார் தெரியுமா???

0

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தனது முதலிடத்தை தக்க வைத்து உள்ளார்.

அவ்வப்போது நடைபெறும் தொடர்களை அடிப்படையாக கொண்டு எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கும் வீரர்கள்,அணிகள் தேர்வு செய்து அதை  பட்டியலாக தயாரித்து  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும். அந்த வகையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார். 

மேலும் அந்த பட்டியலின் படி, ஸ்மித் 891 புள்ளிகள், வில்லியம்சன் 886 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடங்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் மூன்று  பேர் முதல் 10 இடங்களுக்குள் வந்து உள்ளனர்.அதாவது 814 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 747 புள்ளிகளுடன் இந்திய வீரர்களான  ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் 6வது இடத்திலையே உள்ளனர். மேலும் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 412 புள்ளிகள் பெற்று ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேலும் 386 புள்ளிகள் பெற்று  இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், 353 புள்ளிகள் அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சு தரவரிசையில்  908 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 850 புள்ளிகளுடன் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திலையே  நீடிக்கிறார். பந்து வீச்சு தரவரிசையில், முதல் 10 இடங்களில் அஷ்வின் தவிர வேறு எந்த  இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here