இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் – மடக்கி பிடித்த போலீசார்!!

0

கடல் வழியாக சுமார் 952 கிலோ கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்றனர். இந்த சம்பவம் அறிந்த காவல் துறையினர் கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.

இலங்கை:

ராமநாதபுரம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. தங்கம், பீடி இலைகள் மற்றும் கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல் துறை கண்காணிப்பாளருக்கு ஓர் தகவல் கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தகவலை பெயரில் ராமநாதபுரம் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை இன்று அதிகாலை மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதிக்கு சென்றது. அந்த பகுதியில் அல்லாபிச்சை என்பவருக்கு சொந்தமான இடத்தில் பதப்படுத்தப்பட்ட 258 கிலோவிற்கும் அதிகமான கடல் அட்டைகள் மேலும் ஊறவைத்திருந்த சுமார் 694 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

‘எகிறி குதித்தேன்’ பாடலுக்கு அஸ்வினுடன் நடமாடும் ஷிவாங்கி – வேற லெவலில் வைரலாகும் ப்ரோமோ!!

இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகுமாம். தற்போது இதனை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனது பாராட்டை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here