Thursday, May 30, 2024

அக்டோபர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் குறைவு – தனியார் பள்ளி முதல்வர்கள் முடிவு..!

Must Read

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளை அக்டோபர் மாதம் வரை திறக்க வாய்ப்பு இல்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

தொற்று பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக நம்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஒன்று கொரோனா நோய் பரவல். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்க பட வில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Tamil Nadu Private Schools
Tamil Nadu Private Schools

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ‘பேரன்ட் சர்க்கிள்’ நிறுவனம் சென்னை மற்றும் மும்பையில் உள்ள பிரபல தனியார் பள்ளி முதல்வர்களிடம் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது.

“அதிக பரவல்” இருக்கும்:

இது குறித்து அவர்கள் ஆலோசித்தது ” கொரோனா நோய் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. கூடுதலாக பருவமழை ஆரம்பித்து உள்ள நிலையில் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புகள் அதிகம். அதிலும் கிண்டர் கார்டன் என்று சொல்லப்படும் சின்ன குழந்தைகளுக்கான வகுப்புகள் தொடங்க வாய்ப்பு குறைவு. பரவலை தடுக்க சமூக இடைவெளி அவசியம்.”

kinder garden students
kinder garden students

“அதற்கு இன்னும் பல வகுப்புகள் புதிதாக கட்ட வேண்டும். பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும். இது போல் பல சிக்கல்கள் உள்ளது. அதனால் அக்டோபர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் குறைவு” இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மீண்டும் கைதான TTF வாசன்.. ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு.. முழு விவரம் உள்ளே!!

TTF வாசன் சமீபத்தில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -