‘Google Pay ’ செயலிக்கு ரிசர்வ் வங்கி தடையா..? விளக்கம் அளிக்கும் கூகுள் பே..!

0
gpay app
gpay app

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கால் கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை என தகவல்கள் பரவியுள்ளன.

Google Pay மீது குற்றசாட்டு..!

RBI
RBI

கூகுள் பே செயலி மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை மற்றும் அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Google Pay விளக்கம்..!

இது குறித்து கூகுள் பே கூறியதாவது, தங்கள் செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும் அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும் அதனாலேயே என்பிசிஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் கூகுள் பே இடம்பெறவில்லை என்று கூகுள் பே விளக்கம் அளித்ததுள்ளது.

G-Pay
G-Pay

மேலும் கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் மற்ற செயலிகளைப் போல கூகுள் பே செயலியில் பணத்தை அனுப்புவது பாதுகாப்பான ஒன்றே. எந்த ஆபத்தும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here