அரசு பேருந்தில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்கள் – கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்!

0
அரசு பேருந்தில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்கள் - கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்!

அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி சென்றுள்ள நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் படியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படியில் பயணம்:

பொதுவாக கிராமப்புறங்களில் குறைவான பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வந்து செல்லும். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியே பேருந்தில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்வதற்கு இடம் இல்லாத பேருந்தில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

இதனால் பல மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இறைஞ்சி கிராமத்திலிருந்து காலை 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று நகர்ந்த போது படிக்கட்டில் தொங்கி பயணித்த மாணவன் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஊரான இறைஞ்சி கிராமத்தில் ஒரே பேருந்தில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணித்து உள்ளனர்.

அடப்பாவிங்களா.. கடைசியில எங்கள முட்டாள் ஆக்கிருக்கிங்களே டா – பாவனி அமீர் செய்த காரியம்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பேருந்தினுள் இடம் இல்லாததால் பேருந்து மேல் பகுதியில் உட்கார்ந்தும் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கியும் மாணவர்கள் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மாணவன் கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து பலத்த காயம் ஏற்பட்ட அந்த மாணவனை பேருந்து பின் வந்த வாகன ஓட்டிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற வைத்துள்ளனர். மாணவர்களின் உயிரை பாதுகாக்க அரசாங்கமும் பல போக்குவரத்து விதிகளை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை அனைவர்க்கும் ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here